இதய செயலிழப்பு நோயாளிகள் இந்த இ.இ.சி.பி (EECP) சிகிச்சையை எடுத்துக்கொள்ள முடியுமா?
இருதய செயல் இழப்பு (HEART FAILURE) உள்ள சில நோயாளிகளை எண்டு ஸ்டேஜ் (END STAGE) என்று கூறுவோம், அவர்களுக்கு உந்தி செயல்பாடு (PUMPING FUNCTION) மிக குறைவாக இருக்கும், மேலும் அவர்களுடைய இருதய தசைகள் இறந்து விடுவதினால் எந்த ஒரு சிகிச்சையை கொடுத்தாலும் அவர்களுடைய இருதயத்தின் (PUMPING FUNCTION) அதிகப்படுத்த முடியாது. இந்த மாதிரியான நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் அதிகமாக இருக்கும், சிறிது நேரம் கூட நடைபயிற்சி மேற்கொள்ள முடியாது, படுக்க முடியாது, முயன்று படுத்தால் மிக அதிகமாக இருமல் வரும், இரவு முழுவதும் உட்கார்ந்து கொண்டே தூங்குவார்கள். இந்த மாதிரி இருக்கும் போது அவர்களுக்கு இ.இ.சி.பி (EECP) சிகிச்சை முறையை எடுத்துக்கொள்ள முடியுமா என்று கேட்கிறார்கள். இந்த மாதிரி இருதய தசைகள் இறந்த நோயாளிகளுக்கு கடைசி சிகிச்சை முறை என்னவென்று சொன்னால் இதய மாற்று அறுவை சிகிச்சை என்பதுதான் (HEART TRANSPLANT). ஆனால் இந்த இதய மாற்று அறுவை சிகிச்சையை எல்லா நோயாளிகளுக்கும் கொடுக்க முடியாது. அப்படி இருக்கும் போது இந்த இ.இ.சி.பி (EECP) சிகிச்சை முறையை ஒரு பாலம் (BRIDGE) என்று கூறுவோம், அதாவது இந்த இ.இ.சி.பி (EECP) சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் போது நோயாளியினுடைய நோயின் அறிகுறிகள் எல்லாம் (SIGNIFICANT) குறிப்பிடத்தக்க அளவு குறைந்து விடும். அவர்களால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியும், மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது, இந்தமாதிரியான நோயாளிகளுக்கு இரவில் நன்றாக தூங்க முடியும். ஆகையால் இந்த மாதிரி நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறையை கொடுத்து ஆறு மாதகாலம் முடிந்த பிறகு மறுபடியும் இந்த இ.இ.சி.பி (EECP) சிகிச்சையை முறையை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். அதாவது முடிவாக அவர்களுக்கு சரியான சிகிச்சை முறை என்று சொன்னால் அது இதய மாற்று அறுவை சிகிச்சை என்பதுதான் (HEART TRANSPLANT). இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்யும் வரை அவர்களுக்கு இந்த இ.இ.சி.பி (EECP) சிகிச்சை முறையை செய்து கொண்டு இருக்கும் போது அவர்களுடைய வாழ்வாதாரம் (QUALITY OF LIFE) முன்னெற்றம் அவர்களால் வெகு தூரம் நடைபயிற்சி மேற்கொள்ள முடியும் மூச்சு விடுவதில் சிரமம் இல்லாமல் அவர்களுடைய வழக்கமான செயல்களை செய்துகொள்ள முடியும்.இதய அறுவை சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டியை விரும்பாதவர்களுக்கு இ.இ.சி.பி (EECP) சிகிச்சை சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது.உங்கள் இதயத்தை குணப்படுத்தவும், நோயாளிகளுக்கு இ.இ.சி.பி (EECP) சிகிச்சை அளிப்பதில் HEAL YOUR HEART சிறந்த மையம் ஆகும் .
தொடர்பு கொள்ள தொலைப்பேசி என் : 90030 70065 / 90030 70064
Comments
Post a Comment