இ.இ.சி.பி (EECP) சிகிச்சையின் வெற்றி சதவிகிதம் என்ன?

  இதய நோய்களுக்கு பல வகையான சிகிச்சைகள் உள்ளன.சிகிச்சை முறைகள் மாறுபட்டாலும் அதாவது (Bypass) என்பது அறுவை சிகிச்சை, அஞ்சியோபிளாஸ்ட்டி என்பது ஒரு (Tube) குழாய் உடலில் செலுத்தி   இதய ரத்த குழாயில் வலை பொறுத்துவது (Stent), இ.இ.சி.பி (EECP)   என்பது எந்த ஒரு அறுவை சிகிச்சையும் கிடையாது அதை (noninvasive) என்று  கூறுவோம். அதனால், சிகிச்சை முறைகள் மாறுபட்டாலும்   எல்லா சிகிச்சை முறையும் இருதய ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். ஆகையால் இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த கூடிய சிகிச்சை முறை தான் மேற்கண்ட மூன்றும். சில  நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை சிறந்தவையாக இருக்கலாம்,   சில நோயாளிகளுக்கு அஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை சிறந்தவையாக இருக்கலாம், சில நோயாளிகளுக்கு (EECP) இ.இ.சி.பி சிகிச்சை   சிறந்தவையாக இருக்கலாம். இந்த இ.இ.சி.பி (EECP) சிகிச்சையை செய்துகொள்வதன் மூலம் 95% நோயாளிகளுக்கு நெஞ்சு வலி குறைவது, அவர்களால் வெகு தூரம் நடக்க முடிவது, சிறு சிறு வேலைகள் செய்தால் அந்த நெஞ்சு வலி வருவது முழுமையாக குணமடைவது இதை எல்லாவற்றையும் அவர்களால் அடைய முடியும். இந்த சிகிச்சை முறையை எடுத்து கொள்பவர்களின் வெற்றி சதவீதம் என்பது 95% வரை உள்ளது.

தொடர்பு கொள்ள தொலைப்பேசி என் : 90030 70065 / 90030 70064

இணையதளம் : www.healurheart.com




Comments

Popular Posts