இதய நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருப்பது அறுவை சிகிச்சையா அல்லது இ.இ.சி.பி (EECP) சிகிச்சையை?

 இதய நோய்களுக்கு பல வகையான சிகிச்சைகள் உள்ளன.சிகிச்சை முறைகள் மாறுபட்டாலும் அதாவது (bypass) என்பது அறுவை சிகிச்சை, அஞ்சியோபிளாஸ்ட்டி என்பது ஒரு (tube) குழாய் உடலில் செலுத்தி   இதய ரத்த குழாயில் வலை பொறுத்துவது (stent), இ.இ.சி.பி (EECP)   என்பது எந்த ஒரு அறுவை சிகிச்சையும் கிடையாது அதை (noninvasive) என்று  கூறுவோம். அதனால், சிகிச்சை முறைகள் மாறுபட்டாலும்   எல்லா சிகிச்சை முறையும் இருதய ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். ஆகையால் இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த கூடிய சிகிச்சை முறை தான் மேற்கண்ட மூன்றும். சில  நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை சிறந்தவையாக இருக்கலாம்,   சில நோயாளிகளுக்கு அஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை சிறந்தவையாக இருக்கலாம், சில நோயாளிகளுக்கு (EECP) இ.இ.சி.பி சிகிச்சை   சிறந்தவையாக இருக்கலாம். இதில் எந்த நோயாளிக்கு எந்த சிகிச்சை முறை சிறந்தவையாக இருக்கும் என்பதை உங்களுடைய  மருத்துவரோ அல்லது இதய மருத்துவரோ முடிவெடுக்க முடியும். (EECP) இ.இ.சி.பி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு முக்கியமான  ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தாலோ, இதய செயல் திறன் (pumping function) குறைவாக இருந்தாலோ சில நேரங்களில் அவர்களுக்கு  அறுவை சிகிச்சை முறையை பரிந்துரைக்கிறோம். சில நேரங்களில் இந்த அறுவை சிகிச்சை மற்றும் அஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை  முறையை மற்ற இதய மருத்துவர் கூறி இருந்தால் கூட நோயாளினுடைய ஆபத்து பொறுத்து இந்த (EECP) இ.இ.சி.பி சிகிச்சை முறையை சிறந்த முறை என்று நாங்கள் கூறுகிறோம். அதனால் சிகிச்சை முறை என்பது நோயாளிக்கு நோயாளி மாறுபடலாம். எல்லோருக்கும் இந்த சிகிச்சை முறை தான் சிறந்த சிகிச்சை முறை என்று யாராலும்  சொல்ல முடியாது.அறுவை சிகிச்சை இல்லாமல், மருத்துவமனையில்  அனுமதிக்கப்படாமல், ஆபத்து இல்லாத சிகிச்சை முறை ஆகும். இவை அனைத்தும் இ.இ.சி.பி  (EECP) முக்கிய நன்மைகள் ஆகும்.எனவே சிறந்த முடிவுகளுக்கு இந்த இ.இ.சி.பி (EECP) சிகிச்சையை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் தகவலுக்கு இணைப்பை கிளிக் செய்யவும்



Comments